சாலை சீரமைப்பு பணி நிறுத்தம் வாகன ஓட்டிகள் அவதி

ஊத்துக்கோட்டை,:ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் துவக்கப்பட்ட சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில், 32 கி.மீ., துாரத்திற்கு புதிதாக தார்சாலை அமைக்க 32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கியது.

ஜனப்பன்சத்திம் துவங்கி மஞ்சங்காரணை வரை தார்சாலை அமைக்கப்பட்டது. இதேபோல், தொம்பரம்பேடு துவங்கி, பாலவாக்கம் வரை பணி நடந்தது. இடைப்பட்ட இடங்களில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. தார்சாலை அமைக்க, சாலை முழுதும் கீரல் போடப்பட்டு உள்ளது. இதில் டூ- வீலர்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இச்சாலையில், தார் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் இடையே தார்சாலை அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement