கோடை வெப்பம் சமாளிக்க முடியாததால் ஆரணி ஆற்றில் ஆட்டம் போடும் இளசுகள்

கும்மிடிப்பூண்டி:பள்ளிளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் குதுாகலமாக விடுமுறையை கழித்து வருகின்றனர். கொளுத்தும் வெளியிலில் கிரிக்கெட், புட்பால், வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளை அந்தந்த பகுதியில் உள்ள மைதானத்தில் விளையாடி வருகின்றனர்.
கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாத பலர், குளம், ஏரி, கிணறுகளில் நீச்சல் அடித்து விளையாடி மகிழ்கின்றனர்.
கவரைப்பேட்டை அடுத்த ஏ.என்.குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள், கோடை வெயிலில் இருந்து தப்பிக்க, ஆரணி ஆற்றை மைதானமாக்கி விளையாடி வருகின்றனர்.
தற்போது ஏ.என்.குப்பம் அணைக்கட்டில், முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்பதால், அதில் ஓடி ஆடி நீச்சல் அடித்து விளையாடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி
Advertisement
Advertisement