யுத்த வர்ம போர்கலை அணி சிலம்ப போட்டியில் சாம்பியன்
திருவொற்றியூர்:சென்னை மாவட்ட சிலம்ப கழகம், யுத்தவர்ம சிலம்ப போர்கலை அகாடமி இணைந்து, சென்னை மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகளை, திருவொற்றியூர் தேரடி, பூந்தோட்டப் பள்ளி வளாகத்தில், நேற்று நடத்தின.
இதில் 5 வயது முதல் 20 வயது வரை, ஆறு பிரிவுகளாக, ஒன்பது அணிகளைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள், வாள், வேல் கம்பு, மான்கொம்பு மற்றும் கம்பு சண்டை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில், அதிக புள்ளிகளை பெற்ற, யுத்தவர்ம சிலம்ப போர்கலை அகாடமி பள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
தவிர, மூன்று போட்டிகளில் பங்கேற்று மூன்று தங்க பதக்கம் வென்ற ரிஷிகா, அஸ்வத், மோதிக் ஷன், பிரகதி, அனிஷ் உள்ளிட்டோர், சிறந்த சிலம்பாட்ட வீரர் மற்றும் வீரங்கனையருக்கான பட்டம் பெற்றனர்.
போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குப்பன், தி.மு.க., மண்டலக்குழு தலைவர் தனியரசு, யுத்தவர்ம சிலம்ப போர்கலை அகாடமியின் செயலர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி