சித்திரை பிரம்மோத்சவம் தேர் பராமரிப்பு தீவிரம்

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில்.

யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கரில் உள்ளது. இந்த கோவிலில் வரும் 2ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரம்மோத்சவம் துவங்க உள்ளது. தினசரி பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா எழுந்தருளி உள்ளார்.

இதில், 8 ம் தேதி பிரசித்தி பெற்ற தேர் திருவிழா நடைபெறும். இதற்காக, கோவில் வளாகத்தில் உள்ள தேர் அரங்கத்தில், பாதுகாப்பு தகடுகள் அகற்றப்பட்டு, பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் துவங்கியுள்ளன. ஓராண்டுக்கு பின் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் தேர், பிரம்மோத்சவம் துவங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோத்சவத்தை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement