கத்தியை காட்டி அச்சுறுத்தல் ரவுடிகள் கைது

எம்.கே.பி.நகர்:வியாசர்பாடி, புதுநகர் 10வது தெருவில், மதுபோதையில் பொதுமக்களை ரவுடிகள் கத்தியை காட்டி அச்சுறுத்துவதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு, வியாசர்பாடி, ஹவுசிங்போர்டு, மூர்த்திங்கன் தெருவைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய விமல்ராஜ், 23, பரத் சஞ்சய், 22, வியாசர்பாடி, புது நகரை சேர்ந்த தினேஷ் கண்ணன், 22, ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement