மொபைல் போன் பறித்த வாலிபர் கைது

சென்னை:தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் பாலமுருகன், 46; ஆட்டோ ஓட்டுநர். அவர், நேற்று முன்தினம் அதிகாலை, சவாரி முடித்து, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, அவதான பாப்பையா சாலை சந்திப்பில், ஆட்டோவை நிறுத்தி, டீ குடித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், சவாரிக்கு அழைப்பது போல பாலமுருகனிடம் பேச்சு கொடுத்தார். திடீரென அவரிடம் இருந்த, 13,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை பறித்து தப்பினார்.

வேப்பேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போனை பறித்து தப்பிய, பெரம்பூர் பேரக்ஸ் சாலையை சந்தோஷ் சண்முகம், 22, என்பவரை நேற்று கைது செய்தனர். மொபைல் போனையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement