மின்சார ரயில் பழுதால் சேவை 20 நிமிடம் பாதிப்பு

தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில், நேற்று காலை 7:10 மணிக்கு, கோடம்பாக்கத்தை கடந்து, நுங்கம்பாக்கம் நிலையத்தை அடையும் முன் பழுதாகி நின்றது.

ரயில் ஓட்டுநர் இறங்கி சோதித்தார். அதில், ரயில் சக்கரங்கள், பிரேக் பைண்டிங் மற்றும் பிரேக்குக்குள் சிக்கி, திரும்ப முடியாமல் தடைபட்டு நின்றது தெரிய வந்தது.

இதையடுத்து, ரயில்வே பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு, பழுது சரிசெய்யப்பட்டது. இதனால், தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் பயணித்த அனைத்து ரயில்களும், 20 நிமிடங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

Advertisement