குறைந்த மின்னழுத்த பிரச்னை தீர்க்க புதிதாக இரு மின்மாற்றிகள்
முகப்பேர்:அம்பத்துார் மண்டலம், 93வது வார்டு, முகப்பேர், புகழேந்தி சாலை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, அடிக்கடி குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டுவந்தது.
அதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை மாவட்ட மின்சார வாரியம், அம்பத்துார் கோட்டம், புகழேந்தி சாலையில் 23 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு 100 கி.வா., மின்மாற்றிகள் பொருத்தும் பணியை சமீபத்தில் முடித்தது.
இந்நிலையில், அம்பத்துார் எம்.எல்.ஏ., ஜோசப் சாமுவேல், மண்டலக்குழு தலைவர் மூர்த்தி ஆகியோர், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று முன்தினம் மாலை, இதன் செயல்பாட்டை துவங்கி வைத்தனர்.
கோட்ட மேற்பார்வை பொறியாளர் மலைவேந்தன், உதவி செயற்பொறியாளர் மனுநீதி, உதவி பொறியாளர் ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.
பாடிக்குப்பம், வண்டியம்மன் கோவில் தெருவில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டது. அதுவும் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
மேலும்
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
-
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!