ரூ.525 கோடியில் பன்னாட்டு அரங்கம் இந்தாண்டு இறுதியில் முடியும்: அமைச்சர் வேலு
திருப்போரூர்:''முட்டுக்காடில், 525 கோடி ரூபாயில் அமைக்கப்படும் பன்னாட்டு அரங்கம், 2025 இறுதிக்குள் முடிக்கப்படும்,'' என, அமைச்சர் வேலு தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில், 525 கோடி ரூபாயில், கருணாநிதி பெயரிலான பன்னாட்டு அரங்கம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
இதில், 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10,000 பேர் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்கம் ஆகியவை அமைய உள்ளன.
திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், வாகன நிறுத்தம், நுழைவு வாயில் என, அனைத்து வசதிகளும் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், தற்போதைய பணிகளின் நிலை, கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட வேண்டிய பணிகள் குறித்து, பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, 'பன்னாட்ட அரங்க பணிகளளை, 2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026 தொடக்கத்திற்குள் முடிக்கும் வகையில், பணிகளை விரைவுபடுத்த வேண்டும்' என, அமைச்சர் வேலு, அதிகாரிளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமை செயலர் மங்கத் ராம் சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
-
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!
-
11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை; கன்னியாகுமரியில் விபரீதம்