மருத்துவமனையில் திருட்டு தி.நகரில் துணிகரம்

மாம்பலம்:தி.நகர், சதுல்லா தெருவில் டாக்டர் சீனிவாசன் என்பவரின் 'சாய் ஆர்த்தோ' மருத்துவமனை உள்ளது. இங்கு, நேற்று காலை துாய்மை பணியில் ஊழியர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, வரவேற்பறை மேஜையின் டிரா திறந்து கிடந்தது. அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், நேற்று அதிகாலை மருத்துவமனையின் இரவு பணி ஊழியர்களான காவலாளி கோவிந்தசாமி மற்றும் வரவேற்பாளர் அறிவழகன் ஆகியோர் உறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது, 'மாஸ்க்' அணிந்தபடி ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் மூவர், கத்தியுடன் மருத்துவமனைக்குள் நுழைந்து டிராவில் இருந்த 6,300 ரூபாய், மொபைல் போன் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் நந்தகுமார், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement