வீடு புகுந்து திருடியோர் சிக்கினர்

கிண்டி:கிண்டி, லேபர் காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் ஆன்டிரியா, 34. கடந்த 10ம் தேதி, வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 17 சவரன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து கிண்டி போலீசார் விசாரித்தனர். இதில், கடலுார் மாவட்டம், திருவந்திபுரத்தைச் சேர்ந்த செந்தில்முருகன், 30, செல்வமணி, 28, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

நேற்று, செந்தில்முருகனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 12 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். தலைமறைவான செல்வமணியை தேடுகின்றனர்.

Advertisement