பல்லாவரம் அங்கன்வாடிகள் ஓவியங்களுடன் புதுப்பிப்பு

குரோம்பேட்டை:தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்தில் உள்ள அங்கன்வாடி கட்டடங்கள் ஒவ்வொன்றும், போதிய வசதிகள் இன்றி செயல்படுவதாக புகார் வந்தது.
இதையடுத்து, மண்டலத்தில் உள்ள 14 அங்கன்வாடிகளிலும், 75 லட்சம் ரூபாய் செலவில், வண்ண வண்ண ஓவியங்களுடன் அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு கட்டடத்திலும் வர்ணம் பூசப்பட்டு, சிறுவர்களை கவரும் வகையில், விலங்குகளின் ஓவியம் மற்றும் பெயர், உணவு வகை, மழை, குளிர் மற்றும் கோடை காலம் குறித்து தெரிந்துகொள்ளும் வகையிலான ஓவியம், பழம், பறவை, காய்கறி, பூ ஆகியவை குறித்த பெயருடன் கூடிய ஓவியங்கள் வரையப்படுகின்றன.
அங்கன்வாடியில் படிக்கும் சிறுவர்கள் இந்த ஓவியங்களை பார்த்து கற்றுக்கொள்வதற்கும், மகிழ்ச்சியாக விளையாடுவதற்கும் வசதியாக இருக்கும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
Advertisement
Advertisement