ரயில் நிலையத்தில் பேனரால் அபாயம் 

ஆவடி,:ஆவடி அடுத்த இந்து கல்லுாரி ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு மையம் அமைந்துள்ள பகுதியில் விதி மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ரயில் வருவதை பார்க்க முடியாதபடி வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களால், வேலைக்கு செல்லும் பயணியர் கவனம் சிதறி, விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பயணியருக்கு இடையூறாக உள்ள இந்த பேனர்கள், வைப்பதற்கு முறையாக அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இருந்தும், அதிகாரிகள் இதை கண்டுகொள்ளாதது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'தற்போது ரயில் நிலையங்களில் பேனர்கள் வைக்கும் கலாசாரம் உருவாகி வருகிறது. இதை ஆரம்பத்திலேயே தடை செய்ய வேண்டும்' என்றனர்.

Advertisement