சேதமடைந்த சுரங்கப்பாதை சுவரால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

பாரிமுனை:பாரிமுனை, ராஜாஜி சாலையில் ரிசர்வ் வங்கி அருகே, பழமையான ரயில்வே சுரங்கப் பாதை உள்ளது. காமராஜர் காலத்தில் கட்டடப்பட்ட இந்த பாலம், சிதிலமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது.

மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலின், இந்த சுரங்கப்பாதை வழியாக சென்றார். அப்போது, சுரங்கப்பாதை மிகவும் பாழடைந்து, மரம், செடிகள் முளைத்த நிலையில் இருந்தது. உடனடியாக பாலத்தை புதுப்பிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அந்நேரம், சுரங்கப் பகுதியில் பழுதடைந்த சாலை புதுப்பிக்கப்பட்டது. அதேநேரம், சுரங்க பாதை சுற்றுச்சுவர் தடுப்புகள், சிதிலமடைந்து, படுமோசமாக உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் தினசரி விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement