மதுக்கூடம் ஆக்கிரமித்த நடைபாதை மீட்பு

தி.நகர்,:கோடம்பாக்கம் மண்டலம், 141வது வார்டு தி.நகர் சி.ஐ.டி., நகரில், கெனால் வங்கி சாலை உள்ளது. இச்சாலையில் 'டாஸ்மாக்' கடையுடன், தனியார் மதுக்கூடம் உள்ளது.

இந்த மதுக்கூடத்தின் முகப்பை மறைக்கும் விதமாக, நடைபாதையை ஆக்கிரமித்து தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மறைத்து வைத்து, 'டாஸ்மாக்' கடை திறக்காத நேரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது.

இங்கு, இரவில் மது வாங்கும் 'குடி'மகன்களால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து தொடர்ந்து புகார் எழுந்தது.

இதையடுத்து நேற்று, கோடம்பாக்கம் மண்டல செயற்பொறியாளர் இனியன் மற்றும் உதவி செயற்பொறியாளர் கமலகண்ணன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள், நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அப்புறப்படுத்தினர்.

Advertisement