இளநீர் விலையில் மாற்றமில்லை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் இன்றி, 46 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 250 ரூபாய் உயர்த்தப்பட்டு, 18,750 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக, இளநீரின் எடை குறைவாக உற்பத்தியாகிறது.
இதனால், எடையில் விற்பனை செய்யும் இளநீரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, வறட்சியின் காரணமாக இளநீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும், மக்கள் நலன் கருதி, இந்த வாரம் விலை உயர்த்தப்படவில்லை.
தட்டுப்பாடு நிலவுவதால், வரக்கூடிய வாரங்களில் இளநீர் விலை உயரும். தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில், கடுமையான வெயில் நிலவுவதால், இளநீர் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இளநீரை எக்காரணத்தைக் கொண்டும் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்