அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடந்தது. தேர்வில், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தோஷினி, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார்.

மாவட்ட அளவில் மாணவிகள் பூஜாஸ்ரீ, மேக்னா, சந்தோஷினி, தர்ஷினி, கோபிகா, தன்யஸ்ரீ, கிருத்திகா மற்றும் மாணவர்கள் சிவக்குமார், சந்தோஷ் ஆகிய ஒன்பது பேர் முதலிடம் பெற்றனர். தேர்வு பெற்றோருக்கு தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 வகுப்பு வரை கல்வி உதவி தொகை வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த தமிழாசிரியர்கள் சிவக்குமார், தங்கமுத்து ஆகியோரை தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Advertisement