கோவில்களில் அமாவாசை வழிபாடு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோவிலில், சித்திரை அமாவாசையையொட்டி அபிேஷகம், ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து, பிற மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மனை வழிபட்டனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதுபோன்று, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், சுப்ர மணியசுவாமி கோவில், ஐயப்பன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

Advertisement