போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலம் கோவையில் கிறிஸ்தவர்கள் அஞ்சலி

கோவை : மறைந்த கத்தோலிக்க போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு, கோவையில் கிறிஸ்தவர்கள் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் (போப்) பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு, இத்தாலி, ரோம் நகரில் நடந்தது.

இதை முன்னிட்டு, கோவை மறைமாவட்ட ஆயர் தலைமையில் நேற்று மாலை, கிறிஸ்தவர்கள் பேரணியாக சென்றனர். பேரணியில் கோவை மற்றும் மேட்டுப்பாளையம் மறைவட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு சர்ச்சுகளை சேர்ந்த பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பொது மக்கள் என 5000க்கும் மேற்பட்டோர், கைகளில் போப் பிரான்சிஸ் படம் அச்சிட்ட பதாகைகளை ஏந்தி, ஜெபித்தவாறு சென்றனர். பின்னர், புனித மிக்கேல் அதிதுாதர் பேராலயத்தில், கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது.

Advertisement