ஸ்காலர் ஸ்பெக்ட்ரா சார்பில் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு

புதுச்சேரி: ஸ்காலர் ஸ்பெக்டரா அகாடமி மற்றும் தி ஸ்காலர் ஸ்கூல் இணைந்து நீட் மாதிரி நுழைவு தேர்வை கோர்க்காடு தி ஸ்காலர் பள்ளியில் நடத்தின.

மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடந்த தேர்வில், புதுச்சேரி, சென்னை, கடலுார், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜ் தலைமையில் நீட் தேர்வு நடைமுறையின் படி, மாணவ, மாணவியரின் மாதிரி தேர்வு அனுமதி சீட்டு,புகைப்படம், ஆதார் எண் ஆகியவை சரிபார்க்கப்பட்டு தேர்வு அறையில் அனுமதித்தனர்.

தேசிய தேர்வு முகமை வகுத்துள்ள கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன.

தி ஸ்காலர் பள்ளியின் தாளாளர் மற்றும் ஸ்காலர் ஸ்பெக்ட்ரா அகாடமியின் நிர்வாக இயக்குனர் சுரேஷ் கூறுகையில், 'இந்த மாதிரி நீட் தேர்வானது மாணவர்கள் அடுத்த மாதம் 4ம் தேதி நடக்க இருக்கும் நீட் தேர்வில் பங்கு பெறுவதற்கு ஊன்றுகோலாய் அமையும்' என்றார்.

அவர், இந்த மாதிரி நீட் தேர்வில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண்களை பெற்று சாதனை புரிய வாழ்த்தினார்.

இதில், தி ஸ்காலர் பள்ளி மற்றும் ஸ்காலர் ஸ்பெக்ட்ரா அகாடமியின் நிர்வாகத் தலைவர் பழனிவேலு, நிர்வாகத் துணைத் தலைவர்வசந்தி, செயலாளர் செந்தில்குமார்,பொருளாளர் அருள், இணைப் பொருளாளர் பாலசுப்ரமணியன், இணைச் செயலாளர் குகன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.

ஸ்காலர் ஸ்பெக்ட்ரா மாதிரி நீட் மாதிரி தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெரும் மாணவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும். மாதிரி தேர்வின் விடை மற்றும் தேர்வு முடிவுகள் நாளை 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு www.scholarspectra.com என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும்.

Advertisement