அரசு பள்ளியில் முப்பெரும் விழா

புதுச்சேரி: அரியூர் அரசு மேல்நிலை பள்ளியில் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரை வரவேற்கும் விழா, யூத் அண்ட் எக்கோ கிளப் தொடக்க விழா, ஏக் பாரத் சேஷா பாரத் விழா என முப்பெரும் விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் சுமதி தலைமை தாங்கினார். ஆசிரியர் வளர்மதி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் ரவி, தேசிய நல்லாசிரியர் தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

ஆசிரியை அபிராமி மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளித்தார். விழாவில் யூத் அண்ட் எக்கோ கிளப் உறுப்பினர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின்'மீன் வாங்கலையோ மீன்' நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை யூத் அண்ட் எக்கோ கிளப் நோடல் அதிகாரி வளர்மதி முருகன் செய்திருந்தார். ஆசிரியர் பாரதிராஜா நன்றி கூறினார்.

Advertisement