திருவாடானையில் போலீசார் சார்பில் நீர் மோர் பந்தல்

திருவாடானை: கோடை வெயிலின் தாகத்தை தணிக்க போலீசார் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

திருவாடானையில் நேற்று சன்னதி தெருவில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் திறந்து வைத்தார். இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதனால் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் பொதுமக்கள் முதியவர்கள், பெண்கள் கடும் வெயில் காரணமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து சமாளிக்கும் வகையில் இந்த நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் கூறினர்.

Advertisement