தேவிபட்டினம் கஞ்சா வழக்கு எஸ்.பி.பட்டினத்திற்கு மாறுதல்
தொண்டி: தேவிபட்டினம் மரைன் போலீசார் கடற்கரையில் 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அந்த வழக்கு எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாறுதல் செய்யபட்டது.
தேவிபட்டினம் மரைன் எஸ்.ஐ. கதிரவன் தலைமையிலான போலீசார் கடந்த மார்ச் 20 ல் பாசிபட்டினம் கடல்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரையில் ஒரு சாக்கு மூடை ஒதுங்கி கிடந்தது.
போலீசார் பிரித்து பார்த்த போது 17 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கபட்டது. கஞ்சாவை கைபற்றிய தேவிபட்டினம் மரைன் போலீசார் வழக்குபதிவு செய்தனர். அந்த வழக்கு எஸ்.பி.பட்டினம் போலீஸ்ஸ்டேஷனுக்கு மாறுதல் செய்யபட்டது. கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கஞ்சா கடத்தி சென்ற போது படகிலிருந்து ஒரு மூடை தவறி விழுந்திருக்கலாம். அந்த மூடை மிதந்து வந்து கடற்கரையில் ஒதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கபடுகிறது. கடத்தல்காரர்களை தொண்டி இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் தேடிவருகிறார்.
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!