கதம்ப வண்டுகள் அழிப்பு

பெருநாழி: பெருநாழியில் உள்ள தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே பனைமரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கதம்ப வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்.

அதிக விஷத்தன்மை வாய்ந்த கதம்ப வண்டுகள் அப்பகுதியில் சாலையை கடப்போர்களை விரட்டி கடித்து வந்தன. இதுகுறித்து வந்த தகவலின் பெயரில் சாயல்குடி தீயணைப்பு மீட்பு படை நிலைய அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகம் தலைமையிலான மீட்பு படை வீரர்கள் பாதுகாப்பு கவச உடைய அணிந்து கதம்ப வண்டுகளை தீவைத்து அழித்தனர்.

Advertisement