பூமாயி அம்மன் கோயில் தெப்ப உற்ஸவம்

திருப்புத்துார்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப்பெருவிழாவின் பத்தாம் திருநாளை முன்னிட்டு நேற்று இரவு அம்மனின் தெப்ப உற்ஸவ விழா நடைபெற்றது.

இக்கோயிலில் வசந்தப் பெருவிழா பத்துநாட்கள் நடைபெறும்.

ஏப்.17ல் பூச்சொரிதல் விழாவிற்கு மறுநாள் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவில் சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி திருக்குளத்தை வலம் வந்தார். மூன்றாம் திருநாளில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

ஏப்.22ல் பக்தர்கள்பால்குடம் எடுத்தனர். ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு அலங்காரத்தில் உற்ஸவ அம்மன் ரதத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்தார். நேற்று அம்மனுக்கு காலை தீர்த்தவாரியும், மஞ்சள்நீராட்டும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு அம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தார்.

தெப்பக்கரை முழுவதும் பெண்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிப்பட்டனர். குளத்தைச் சுற்றிலும் திரளாக பக்தர்கள் கூடி தெப்பத்தை தரிசித்தனர். பின்னர் அம்மனுக்கு காப்புக்களைந்து விழா நிறைவடைந்தது. விழா குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.

Advertisement