கல்வியாண்டு இடையில் ஆசிரியர் ஓய்வு தேதியை மே 31 வரை நீட்டிக்க வேண்டும்
சிவகங்கை: கல்வித்துறையில் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க, நீட்டிப்பு தேதியை மே 31 ஆக உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மாணவர்களின் கல்வி நலன் கருதி கற்பித்தல் பணிபாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு 2022--23ஆம் கல்வியாண்டு முதல் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் வழங்க அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு அரசு விதிகளின்படி மருத்துவ தகுதிச்சான்றின் அடிப்படையில் கல்வி ஆண்டின் இறுதி வரை மே 31 வரை மாணவர்கள் கல்வி நலன் பாதிக்கக்கூடாது என்பதற்காக பணி நீடிப்பு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் உள்ளது.
ஆனால் சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பள்ளி கடைசி வேலை நாள் ஏப்.30 என்பதால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். ஏப்.2022ஆம் ஆண்டு அரசாணையை தவறாக புரிந்து கொண்டு ஏப்.30 அன்று பணி விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவே தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பணி நீட்டிப்பு தேதியினை மே 31 என உறுதி செய்து ஆசிரியர்களின் குழப்பத்தைப் போக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!