உலக புத்தக தினம்

பெண்ணாடம் : பெண்ணாடம் கிளை நுாலகத்தில் உலக புத்தக தின விழா நடந்தது.

வாசகர் வட்ட தலைவர் தாமரை மணிகண்டன் தலைமை தாங்கினார். லயன்ஸ் கிளப் தலைவர் சக்திவேல், பொருளாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

நுாலகர் வீராசாமி வரவேற்றார். வாசகர் வட்ட உறுப்பினர்கள், வாசகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், புத்தக வாசிப்பின் பயன்கள், புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் அறிவாற்றல் குறித்து பேசப்பட்டது.

வாசகர் சபாநாயகம் நன்றி கூறினார்.

Advertisement