காஷ்மீரில் பலியானோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

அனுப்பர்பாளையம் : காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியானோருக்கு கணக்கம்பாளையம் ஊராட்சி, பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பஸ் ஸ்டாப் அருகில் நேற்று மாலை நடந்தது.

அனைத்து கட்சியினர், பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, இறந்த வர்களின் படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். மெழுகு வர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

Advertisement