வருவாய்த்துறை ஆர்ப்பாட்டம்  

சிவகங்கை: சிவகங்கையில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், நாகேந்திரன், வேல்முருகன், ராஜமார்த்தாண்டன், பெரியசாமி, மாரி ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.

மாநில துணை தலைவர் தமிழரசன் நிறைவுரை ஆற்றினார். வருவாய்துறைக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி நெருக்கடியை கைவிட வேண்டும்.

கருணை பணி நியமனத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். தொகுப்பூதிய, தற்காலிக பணி நியமனத்தை ரத்து செய்து, நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும்.

ஜூலை 1யை வருவாய்த்துறை தினமாக கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட நிதி காப்பாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

Advertisement