மூடப்படாத குழியால் போக்குவரத்து நெரிசல்

திருப்பூர், : அவிநாசியில் இருந்து திருப்பூர் வரும் வழியில் தண்ணீர் பந்தல் ஸ்டாப் அருகே சிக்னல் உள்ளது. இங்குள்ள நால்ரோடு சந்திப்புக்கு அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம் விரிவு ரோட்டில் இருந்து வாகனங்கள் வருகின்றன. 'பீக்ஹவர்' தருணங்களில், அவிநாசி ரோட்டில் பயணிக்கும் வாகனங்கள் நின்று நிதானமாக வருவதில்லை.

மாநகர எல்லை துவக்கம் என்பது தெரிந்தும், 50 - 60 கி.மீ., வேகத்தில் நால்ரோட்டை கடக்க முயல்கின்றனர். கடந்த ஒரு மாதம் முன் சிக்னலுக்கு மேற்கு புறத்தில் திருப்பூர் - அவிநாசி ரோட்டில் குழாய் பதிக்கும் பணிக்கு குழி தோண்டப்பட்டது; பணி முடிந்து மூடப்பட்டது.

தற்போது, அவிநாசி - திருப்பூர் ரோட்டில், வாகனங்கள் கடந்து செல்லும் வளைவில் குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால், சிக்னல் இருந்தும், ஒவ்வொரு திசையில் இருந்து வாகனங்கள் முன்னேறுவதால், போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாமல் உள்ளது.

Advertisement