பராமரிப்பு இல்லாத சமுதாயக்கூடம்

அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, 4வது வார்டிலுள்ள சமத்துவபுரத்தில் அப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.
சமுதாய கூட கட்டடம் வர்ணம் பூசி பல வருடங்களாகியுள்ளது. பாதுகாப்பு இல்லாததால், உள்ளே செல்லும் நபர்கள் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
அப்பகுதியினர் கூறுகையில், ''இப்பகுதியில் வசிப்போர், தங்கள் வீட்டு விஷேசத்திற்கு சமுதாய கூடத்தையே நம்பி உள்ளோம். ஆனால், சமுதாய கூடத்தில் எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லை. நிகழ்ச்சி நடத்தும்போது, குடிநீர், மின் விளக்கு உள்ளிட்டவற்றை நாங்களே ஏற்பாடு செய்வதால், பெரும் சிரமத்தை சந்திக்கிறோம். எனவே, சமுதாய கூடத்தை பராமரித்து, போதிய அடிப்படை வசதிகளை செய்துதர மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
அதே சமுதாய கூட வளாகத்தில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. அது செயல்படாமல் பூட்டு போடப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் சுகாதார நிலையத்திற்கு தொலைவில் உள்ள நெருப்பெரிச்சலுக்கு செல்கின்றனர்.
துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்