பலா சீசன் களைகட்டியது தினமும் 15 டன் வரத்து

திருப்பூர், : சித்திரை மாதம் துவங்கியதில் இருந்தே, பலாப்பழ வரத்து திருப்பூரில் துவங்கிவிடும். சித்திரை துவங்கும் வரை, தர்பூசணி பழம் விற்றுக்கொண்டிருந்த வியாபாரிகள், தற்போது பலாப்பழத்துக்கு மாறிவிட்டனர்.

பலாப்பழ மொத்த வியாபாரிகள் கூறியதாவது: புதுக்கோட்டை மற்றும் பண்ருட்டி மார்க்கெட்டில் இருந்து, திருப்பூருக்கு தினமும், 15 டன் எடையுள்ள பலாப்பழம் விற்பனைக்கு வருகிறது. திருப்பூரில் இருந்து, அனைத்து தாலுகா பகுதிகளுக்கும் சில்லரை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, கிலோ, 30 முதல், 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வியாபாரிகள், பலாச்சுளையை, கிலோ 200 ரூபாய்க்கு விற்கின்றனர். சீசன் முடியும் நேரத்தில், விலை குறையவும் வாய்ப்புள்ளது.

பண்ருட்டி பலாப்பழம், குறைந்தது 10 முதல், 20 கிலோ வரை இருக்கும். அதிக பலாச்சுளைகளும் இருக்கும்; வாசனையும், சுவையும் மக்களை ஈர்க்கிறது; வாடிக்கையாளர் தேடிவந்து, பழங்களை வாங்கி செல்கின்றனர்.

Advertisement