வடமாடு மஞ்சுவிரட்டு

மேலுார்: மேலுார் வினோபா காலனியில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராமத்தார்கள் மற்றும் செவன் பேந்தர்ஸ் விளையாட்டு கழகம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.

இதில் மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகள் கலந்து கொண்டன.

எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement