பஸ்ஸ்டாப் சுத்தம் செய்த பணியாளர்

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி பகுதியில் வெளியூர் பஸ் ஸ்டாண்ட், மறவன் குளம், ஆனந்தா தியேட்டர், தெற்குத் தெரு, சந்தைப்பேட்டை பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட பஸ் ஸ்டாப்புகள் உள்ளன.

இவற்றின் உள், வெளிப்பகுதிகளில் அரசியல் கட்சிகள் முதல் அனைத்துத் தரப்பினரும் பொறுப்பற்ற முறையில் போஸ்டர்களை ஒட்டிச் செல்கின்றனர்.

பயணிகளும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதால் பஸ் ஸ்டாப்புகள் அருவருக்கத்தக்க வகையில் இருந்தன. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் அசோக் குமார் உத்தரவின் பேரில், சுகாதார அலுவலர் சிக்கந்தர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் காலை முதல் மதியம் வரை பஸ் ஸ்டாப்களை சுத்தம் செய்தனர்.

பஸ் ஸ்டாப்களில் ஒட்டியிருந்த போஸ்டர்களை அகற்றினர். தண்ணீர், ரசாயன பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்தனர்.

Advertisement