சேதம் அடைந்த ரோடால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் நுழைவுப் பகுதியில் ரயில்வே கேட் அருகே பிரதான ரோடு நடுவில் சேதம் அடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

தென்கால் கண்மாய் கரையில் வாகன போக்குவரத்துக்காக புதிய தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. திருமங்கலம், திருநகரில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் புதிதாக அமைத்த ரோட்டில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த ரோடு பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை.

புதிய ரோடு துவங்கும் இடத்தை ஒட்டியுள்ள ரோட்டில்தான் தற்போது வாகனங்கள் செல்கி்ன்றன. புதிய ரோட்டை அமைத்தபோது, அப்பகுதியில் 500 அடிக்கு சேதம் அடைந்தது. இதையடுத்து தார் முற்றிலும் மறைந்து ஜல்லிக்கற்களாக பரவிக் கிடக்கின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர்.

இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். விபரீதம் விளையும் முன் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.

Advertisement