'நீட்' மெயின் தேர்வு எழுதிய உணர்வை தந்தது: தினமலர் 'நீட்' மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்

மதுரை : மதுரையில் தினமலர் - ஸ்டாரெட்ஸ் இணைந்து நடத்திய தினமலர் நீட் மாதிரித் தேர்வு, 'நீட்' மெயின் தேர்வினை எழுதிய உணர்வைத் தந்தது என மாணவர்கள் உற்சாகம் தெரிவித்தனர்.
பிளஸ் 2 முடித்து மருத்துவக் கனவில் உள்ள மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தினமலர் சார்பில் இந்த மாதிரித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு மே 4 ல் நடக்கும் நீட் தேர்வில் பங்கேற்க தயாராகி வரும் மாணவர்களுக்கு மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நேற்று தினமலர் சார்பில் நீட் மாதிரி தேர்வு நடந்தது. இதில் 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்பதிவு செய்தவர்கள் காலை 9:30 மணிக்கு வரவேண்டும் எனவும், 9:45 மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், ஆர்வ மிகுதியால் காலை 8:00 மணிக்கே பெற்றோருடன் மாணவர்கள் வந்தனர். அவர்கள் சரியான நேரத்தில் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1:15 மணி வரை தமிழ், ஆங்கிலத்தில் தேர்வு எழுதினர். அரசு நடத்தும் நீட் தேர்வு போன்றே நடத்தப்பட்டது. தேர்வு முடியும் வரை பெற்றோர் அமர்வதற்கு கல்லுாரி வளாகத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டது.


மேலும்
-
செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்