சித்திரை தேர் விழாவுக்காக சாலை அமைக்கும் பணி

அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத் தேரோட்டத்தையொட்டி, வரும் மே 8, 9, 10 ஆகிய தேதிகளில் பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் வடம் பிடித்து பக்தர்கள் நான்கு ரத வீதிகளிலும் இழுத்து வரப்படும்.

கடந்த சித்திரைத் தேர் விழா முடிந்த பின்புகுடிநீர் குழாய் பதிப்பு, புதைவட மின் இணைப்புகளுக்காக தோண்டப்பட்ட குழிகள், அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் என மேற்கு ரத வீதி பலமுறை சேதப்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. தேர்த்திருவிழாவிற்கு 10 நாட்களே உள்ள நிலையில் நேற்று அவிநாசி பேரூராட்சி சார்பில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில், மேற்கு ரதவீதியில் ரோடு அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

Advertisement