சிதிலமடைந்த மடையை சீரமைக்குமா நீர்வளத்துறை

மேலுார்: தி. புதுப்பட்டியில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள துாங்கனேந்தல், மறிச்சுகட்டி கண்மாய் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக் கண்மாய்களுக்கு 4 ஏ இலுப்பக்குடி கால்வாய் வழியாக வரும் தண்ணீர் நிரம்பி அதன் மூலம் ஏராளமான ஏக்கர் பாசனம் பெறும். தண்ணீர் வெளியேறும் இரண்டாவது மடை, கதவு சிதலமடைந்துள்ளது.

அதனால் 24 மணி நேரமும் வீணாக தண்ணீர் வெளியேறுவதால் பாசனத்திற்கு தேவையான நேரத்தில் பயன்படுத்த முடியாத நிலையும், பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. அதனால் விவசாய பணிகள் துவங்குவதற்கு முன் மடையை ஆய்வு செய்து குழாய் பதித்து, புதிய மடை மற்றும் இரும்பு கதவு அமைத்து தர நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement