கள்ளழகர் கோயிலில் கொட்டகை முகூர்த்தம்; சித்திரைத் திருவிழா துவக்கமாக...

அழகர்கோவில் : சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் கொட்டகை முகூர்த்தம் எனும் முகூர்த்தக்கால் நடப்பட்டு ஆயிரம் பொன்சப்பரம் மற்றும் யாளி தலையலங்காரம் நிகழ்ச்சிகள் நடந்தன.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரைத்திருவிழாவையொட்டி நேற்று ஏப்., 27 முகூர்த்தகால் நடப்பட்டது. மே 8 ல் துவங்கி 17 வரை நடக்கும் இவ்விழாவின் துவக்கமாக மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் மேளதாளம் முழங்க முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஆயிரம் பொன் சப்பரத்திற்கு பூஜை செய்து அலங்கரித்தனர். வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனுார் மண்டபத்திலும் முகூர்த்தகால் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி பவானி சுப்பராயன், கள்ளழகர் கோயில் துணை ஆணையர் யக்ஞநாராயணன், அறங்காவலர்கள் பாண்டியராஜன், மீனாட்சி, செந்தில்குமார், ரவிக்குமார், மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்கள் மீனா, சுப்புலட்சுமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், கூடலழகர் பெருமாள் கோயில் உதவி ஆணையர் பிரதிபா பங்கேற்றனர்.
மே 10 மாலை கள்ளழகர் மதுரை புறப்பாடு
இந்நிகழ்ச்சிகளைத்தொடர்ந்து மண்டகப்படிகளில் பந்தல் அமைக்கப்படும். இந்தாண்டு 494 மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருள உள்ளார். மே 8, 9 ல் கள்ளழகர் கோயிலில் பெருமாள் புறப்பாடு நடக்கிறது. மே 10 மாலை 6:00 மணிக்கு சுந்தராஜ பெருமாள் கள்ளழகர் அலங்காரத்தில் அழகர்மலையிலிருந்து மதுரை வைகையாற்றில் இறங்க புறப்படுவார். தொடர்ந்து வழிநெடுகிலும் உள்ள பல்வேறு மண்டக படிகளில் எழுந்தருளும் கள்ளழகருக்கு மே 11 ல் மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கும். சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 12 அதிகாலை 5:45 முதல் 6:05 மணிக்குள் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் வைகை ஆற்றில் தங்கக்குதிரையில் கள்ளழகர் எழுந்தருள்வார். பின் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடக்கும்.
கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம்
அண்ணாநகர் வழியாக வீரராகவப்பெருமாள் கோயிலில் இரவு எழுந்தருளும் கள்ளழகர், மே 13ல் சேஷ வாகனத்தில் புறப்பட்டு மதியம் தேனுார் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுப்பார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கும். மே 14 அதிகாலை மோகினி அவதாரத்தில் காட்சியளித்தல், மதியம் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபம் புறப்பாடு நடக்கும். மே 15ல் கள்ளழகர் அழகர் மலைக்கு புறப்படுவார். மே 16 அதிகாலை அப்பன் திருப்பதியில் எழுந்தருளி, காலை 10:00 முதல் 10:25 மணிக்கு இருப்பிடம் சேர்வார். மே 17 ல் உற்ஸவ சாற்று முறை நடக்கும்.
மேலும்
-
செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்