மண்டல பூஜை

திருநகர்: மதுரை விளாச்சேரி வேளார் தெருவில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பூமி நீளா வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மார்ச் 9ல் கும்பாபிஷேகம் நடந்தது. அன்றுமுதல் நடந்த மண்டலாபிஷேகம் நேற்று பூர்த்தியாகி, மண்டல பூஜை நடந்தது.

மூலவர்கள் முன்பு யாகம் வளர்த்து பூஜை நடந்தது.

சிவகங்கை சமஸ்தான சேவகபெருமாள் கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார் சேவற்கொடியோன், விளாச்சேரி கருப்பச்சாமி சிவம், குலாலகுல சிவாச்சாரியார்கள் யாக பூஜை நடத்தினர். மூலவர்கள், உற்ஸவர்கள், விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, கருடாழ்வாருக்கு புனித நீர் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement