புதிய பஸ்கள் துவக்கம்

அழகர்கோவில்: அழகர்கோவிலில் அறநிலைத்துறை சார்பில் கள்ளழகர் கோயில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக ரூ. 1.20 கோடி மதிப்பில் 4 புதிய மினி பஸ்கள் துவங்கப்பட்டது.

அழகர்கோவில் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோயிலுக்கு மினிபஸ்கள் சென்று வந்தன. பதினைந்து ஆண்டுகளாக இயங்கிய இப்பஸ்கள் பழமையாகி, சேதமடைந்துள்ளது. எனவே அவற்றை மாற்றி புதிய பஸ்களை இயக்க திட்டமிட்டனர்.

இதையடுத்து 4 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. இப்பஸ்களை அமைச்சர்கள் மூர்த்தி, சேகர்பாபு நேற்று கொடியசைத்து துவக்கினர். கள்ளழகர் கோயில் முதல் சோலைமலை முருகன் கோயில் வரை 3 கி.மீ., துாரத்திற்கு ஒருவருக்கு ரூ. 10 கட்டணம்.

இந்நிகழ்ச்சியில் கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் மீனாட்சி, பாண்டியராஜன், செந்தில்குமார், ரவிக்குமார், மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்கள் சுப்புலட்சுமி, மீனா, திருப்பரங்குன்றம் அறங்காவலர் சண்முக சுந்தரம் பங்கேற்றனர்.

Advertisement