பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட இணைப்புக்கு வேண்டும் 'டிஜிட்டல்' மீட்டர்

மதுரை: 'பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மதுரை மாநகராட்சி பகுதி வீடுகளுக்கு வழங்கும் குழாய் இணைப்புகளில் முறைகேடுகளை தடுக்க 'டிஜிட்டல் மீட்டர்' பொருத்த வேண்டும்' என அ.தி.மு.க., எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.1653 கோடியில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் 90 சதவீதம் முடிந்துள்ளது. இத்திட்டத்தை அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இதற்காக வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் பெரும்பாலும் முடிவுறும் நிலையில் உள்ளது. குடிநீர் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக பயன்படுத்திய குடிநீரை அளவீடு செய்ய சாதாரண மீட்டர் (மேனுவல் மீட்டர்) பொருத்தப்பட்டு வருகிறது.
இதன்படி நான்காம் கட்ட பணிகளில், விரிவாக்க வார்டுகளில் 957.19 கி.மீ.,க்கு குழாய் பதித்து 92 ஆயிரத்து 644 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் கட்ட பணியில் நகரின் மையத்தில் உள்ள 57 வார்டுகளில் 759.42 கி.மீ., குழாய் பதித்து, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 312 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவை உட்பட இத்திட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 208 இணைப்புகள் வழங்க திட்டமிட்டு, தற்போது ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 611 இணைப்புகளில் சோதனை ஓட்டம் நடக்கிறது.
இதில் குடிநீர் பயன்பாட்டை அளவீடு செய்ய சாதாரண மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் தண்ணீர் பயன்படுத்திய அளவை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும். இதனால் தில்லுமுல்லு நடக்க வாய்ப்புள்ளது. எனவே துவக்கத்திலேயே முறைகேடுக்கு வாய்ப்பளிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அ.தி.மு.க., எச்சரித்துள்ளது.
மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா கூறியதாவது: வரிவிதிப்பில் பல குளறுபடிகள் உள்ளன. மாநகராட்சி இனங்களுக்கு 'இலாகா வசூல்' என்ற பெயரில் முறைகேடுகள் நடக்கின்றன. இந்த வகையில், ரூ.1653 கோடியில் செயல்படுத்தும் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திலும் சாதாரண மீட்டர் பொருத்தினால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு ஏற்படும்.
அரசியல்வாதிகள், அதிகாரிகளின் வீடுகளுக்கு 'கரிசனம்' காட்ட குடிநீர் பயன்பாட்டு அளவை மாநகராட்சி அதிகாரிகளே குறைக்க வாய்ப்புள்ளது. வேண்டாதவர்களுக்கு அளவீ்டை அதிகரித்து கட்டணம் வசூலிப்பதும் நடக்கும். இதுகுறித்து மாநகராட்சி கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளேன். இத்திட்டத்தில் லட்சக்கணக்கில் இணைப்புகள் வழங்கப்படும் என்பதால் ரூ.கோடிகளில் முறைகேடு நடக்கலாம். இதனால் டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தி, தண்ணீர் அளவீடை கமிஷனர் கட்டுப்பாட்டில் வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் முறைகேடுகளை தவிர்க்க முடியாததாகிவிடும் என்றார்.
மேலும்
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு