முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வத்தலக்குண்டு: 20 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள் பள்ளியை தூய்மைப்படுத்தினர்.

விருவீடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 2003, 2005ல்,12ம் வகுப்பு கலை பிரிவு படித்த மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர். திண்டுக்கல், தேனி, மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர். ஆசிரியர்கள் தாரை, தப்பட்டையுடன் அழைத்து வரப்பட்டனர். நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். மாணவர் தேவராஜ் தலைமை வகித்தார். ராமமூர்த்தி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சியம்மாள் வரவேற்றார். பள்ளியை தூய்மைப்படுத்தி மரக்கன்றுகள் நட்டனர். முன்னாள் மாணவர் சுரேஷ் நன்றி கூறினார்.

Advertisement