நீ சரணடைந்து விடு; நாங்களாவது நிம்மதியாக வாழ்கிறோம்! பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதியின் தாய் கதறல்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், ஏப்., 22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி உயிர்கள் பலியாகின. பாக்., அரசு, - ராணுவம் - ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு ஆதரவுடன், லஷ்கர் - இ- தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் - ஜெய்ஷ் -இ- முகமது பயங்கரவாத அமைப்புகள், 'தி ரெஸிஸ்டன்ட்ஸ் போர்ஸ்' என்ற பகடி பெயரில், இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்பட்ட, 14 பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பஹல்காமில் நடந்த கொலைவெறி தாக்குதலில் முக்கிய பங்காற்றியவன், அடில் ஹுசைன் தோக்கர். இவன் காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் மாவட்டம் குரீ கிராமத்தை சேர்ந்தவன். பட்டதாரியான இவன், பகுதி நேர ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 2018ம் ஆண்டு, ஏப்., 29ல், பாத்காம் எனும் இடத்தில் ஏதோ, போட்டித்தேர்வு எழுத சென்றான். பின், வீடு திரும்பவில்லை. போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை.
இதையடுத்து, மூன்று நாட்களுக்குப் பின், தனது மகனை காணவில்லை என, தாய் ஷாஜதா பானு, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தார்.
ஆனால், தற்போது இந்திய உளவு அமைப்புகள் நடத்திய விசாரணையில், இவன் கல்வி விசா பெற்று பாகிஸ்தான் சென்று, அங்கு பயங்கரவாத இயக்க தலைவர்களை சந்தித்தது தெரியவந்துள்ளது. அங்கிருந்து இந்தியாவுக்கு எதிரான தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளான். 2024 ஆண்டு கட்டுப்பாடு எல்லைக்கோடு தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்துள்ளான். ஆனால், சொந்த கிராமத்துக்கு வரவில்லை.
பஹல்காமில் ராணுவ உடையில் வந்து சுற்றுலா பயணியரை கொன்றவர்களில் அடில் ஹுசைன் தோக்கரும் ஒருவன் என கண்டறிப்பட்டுள்ளதால், ராணுவம் குரீ கிராமத்தில் உள்ள அவனது வீட்டை, இடித்து தரைமட்டமாக்கியது. அங்கு வசித்து வந்த தாய் ஷாஜதா பானுவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று, அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டில் ஒப்படைத்தனர்.
அடில் ஹுசைன் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது தாய் ஷாஜதா பானு கூறுகையில், ''எனது மகன் இதுபோன்ற படுபாதக செயலில் ஈடுபடுவான் என, சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவன் இந்த கொடுஞ்செயலை செய்திருந்தால், அதற்கான தண்டனையை நிச்சயம் வழங்க வேண்டும். மகனே, நீ எங்கிருந்தாலும் சரணடைந்து விடு; நாங்களாவது நிம்மதியா வாழ்கிறோம்,'' என்றார்.











மேலும்
-
செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்