தொடரும் மேகமூட்டத்தால் ஏமாற்றம்

செம்பட்டி: செம்பட்டி, தர்மத்துப்பட்டி, வீரக்கல் பகுதிகளில் 4 நாட்களாக மேகமூட்டம் மட்டுமே நீடிப்பதால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

சித்தையன்கோட்டை, அக்கரைப்பட்டி மல்லையாபுரம், வேலக்கவுண்டன்பட்டி, வண்ணம்பட்டி பகுதிகளில் கோடை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக பெரும்பாலான இடங்களில் உழவு பணிகளை முடித்து நிலத்தை தயார்படுத்தி கோடை மழையை எதிர்நோக்கி உள்ளனர்.

வெப்பச்சலன சுழற்சி, மழை தொடர்பான அறிவிப்புகள், சில வாரங்களாக தொடர்கின்றன. இதனால் கோடை மழையை எதிர்பார்த்த விவசாயிகள் பெருதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இருந்தபோதும், குறிப்பிடத்தக்க மழை இல்லை. பகலில் வெயிலின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அவ்வப்போது மாலை நேரங்களில் மேகமூட்டம் மட்டுமே காணப்படுகிறது. சாரல் மழை கூட இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

Advertisement