போலீஸ் செய்திகள்....
திருமணமான பெண் மாயம்
ஆண்டிபட்டி: கதிர்நரசிங்கபுரம் பவுன்ராஜ் 63. இவரது மகள் செல்வரதி 35. இவருக்கு திருமணம் முடிந்து கணவருடன் போடியில் வசிக்கிறார். 10 வயது மகள், தனது தாத்தா பவுன்ராஜ் வீட்டில் தங்கி 4ம் வகுப்பு படித்து வருகிறார். ஏப்ரல் 22 ல் செல்வரதி, 'தனக்கு உடல்நிலை சரியில்லை' என்று கூறி கதிர்நரசிங்கபுரத்தில் உள்ள தந்தையின் வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார். ஏப்ரல் 24ல் பவுன்ராஜ் உடல்நிலை சரியில்லாத தனது மனைவியை அழைத்துக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டார். மதியம் திரும்பி வந்து பார்த்தபோது மகள் செல்வரதியை காணவில்லை. அவருடைய அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.
நடந்து சென்றவர் வேன் மோதி பலி
பெரியகுளம்: மேல்மங்கலம் ராஜேந்திரபுரம் கோகுலகிருஷ்ணன் 49. வடுகபட்டி சாஸ்தா கோயில் எதிர்புறம் சேதுபதி, தனது ஒர்க் ஷாப்பில் வேனிற்கு எலக்ட்ரிக் வேலை செய்வதற்கு, வேனை இயக்கி கொண்டிருந்தார். அப்போது 'நியூட்ரல்' சமநிலையில் வைத்து வேலை செய்து கொண்டிருந்தார். இவரது உதவியாளர் கேசவனிடம் வேனில் ஏறி நியூட்ரலை தொடர்ந்து இயக்கக் கூறினார். கேசவன் அஜாக்கிரதையாக 'கியர்' போட்டுள்ளார். இதில் வேன் திடீரென இயங்கி கோகுலகிருஷ்ணன் மீது மோதியது. இதில் காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கோகுலகிருஷ்ணன் இறந்தார். தென்கரை போலீசார் விபத்து ஏற்படுத்திய சில்வார்பட்டியைச் சேர்ந்த சேதுபதி, கேசவன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
புலி தாக்கி பசு காயம்
மூணாறு: கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷன் தொழிலாளி ஐய்யனாருக்குச் சொந்தமான பசு நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்றது. அங்குள்ள தேயிலை தோட்ட எண் 22ல் மேய்ந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத வகையில் வந்த புலி, பசுவை தாக்கியது. அதனை அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். சப்தம் கேட்டு புலி, பசுவை விட்டுச் சென்றது. பலத்த காயம் அடைந்த பசு உயிருக்கு போராடி வருகிறது. அப்பகுதியில் கடந்த ஓராண்டில், ஐந்துக்கும் மேற்பட்ட பசுக்கள் புலி, சிறுத்தை ஆகியவற்றிடம் சிக்கி இறந்து வருவது குறிப்பிடத்தக்கது.
விபத்தை ஏற்படுத்தி தப்பிய கணவர் கைது
கூடலுார்: கேரளா ஆலடியை சேர்ந்தவர் சுரேஷ் 43. இவரது மனைவி நவீனா 39. இருவரும் காரில் வரும் போது உப்புதரா அருகில் பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் விபத்து ஏற்படுவதற்கு முன் காரின் கதவை திறந்து, கணவர் தப்பி ஓடிவிட்டார். விபத்தில் காயமடைந்த மனைவியை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். குமுளி வண்டிப் பெரியாறு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் கண்காணிப்பு கேமராவில் பதிவானதை ஆய்வு செய்தனர். இந்நிலையில் தப்பியோடிய சுரேசை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
தகராறில் நால்வர் மீது வழக்கு
தேவதானப்பட்டி: ஏ.வாடிப்பட்டி பூவனராசன் 42. அதே ஊரைச் சேர்ந்தவர் நாகன். இவர்களுக்கு இடையே நிலப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் பூவனராசன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இவரை நாகன், அவரது மகன்கள் சவுந்திரம், மகேந்திரன், கார்த்தி ஆகியோர் தாக்கி காயப்படுத்தினர். ஜெயமங்கலம் போலீசார் நாகன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்