பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா நடந்தது. மூத்த உறுப்பினர் நாகேந்திரன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

விழாவில் பங்கேற்றவர்கள் பா.ஜ., வை வாழ்த்தியும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் பா.ஜ., மூத்த நிர்வாகிகள் மூக்கையா, பரமன், ராமச்சந்திரன், ரமேஷ்குமார், நாகராஜ், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement