வெப்பத்தை சமாளிக்க நீர்நிலைகளில் தஞ்சமடையும் பொதுமக்கள் உள்ளாட்சிகள் சார்பில் கண்காணிப்பு அவசியம்

தேனி: ''நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தை சமாளிக்க பொது மக்கள் ஆறுகள், அருவிகள், கிணறுகளில் பகல் நேரத்தில் குளிப்பதற்கு குவிந்து வருகின்றனர். நீர்நிலைப் பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.'' என, சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் மாலை நேரத்தில் குளுமையான சூழல் நிலவுகிறது.
காலை, மதிய நேரத்தில் அதிக அளவில் வெயில் தாக்கம் உள்ளது. வெப்பத்தை சமாளிக்க முல்லைப் பெரியாற்றில் வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி, குன்னுார், அரண்மனைப்புதுார் ஆகிய பகுதிகளில் பொது மக்கள் குடும்பத்துடன் குளிக்கின்றனர். சிறுவர்கள் நண்பர்களுடன் குளிக்கின்றனர். இது தவிர சின்னச்சுருளி, பெரியகுளம் கும்பக்கரை அருவிகளுக்கும் அதிகளவில் செல்வது தொடர்கிறது. பொது மக்கள் குளிக்கும் இடங்களில் அசம்பாவிதங்களை தடுக்க, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு