மூலிகைத் தோட்டம் தரும் புதிய அனுபவம் வித்தியாசமான முயற்சிக்கு கம்பம் தம்பதியினருக்கு குவியும் பாராட்டு

கம்பம் காமயக் கவுண்டன்பட்டி நாட்டாண்மை காரர் தெரு தனியார் மெட்ரிக் பள்ளி மேலாளர். இவரது மனைவி ஷர்மிளா மேல் நிலைப் பள்ளி ஒன்றில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களது வீட்டில் துாதுவளை, துளசி, செம்பருத்தி, ஆடாதொடை, முல்லை, செவ்வந்தி, ரோஜா, செண்பகம், அடுக்கு மல்லி, கற்றாழை, அரளி, சங்குப்பூ, இட்லிப்பூ, தாழம்பூ என வாசம் தரும் மலர்ச் செடிகள், மூலிகைச் செடிகள் வளர்த்து வருகின்றனர்.
இதனால் இவர்கள் அமைத்துள்ள மூலிகைத் தோட்டத்தில் சுவாசிப்பதற்கு நல்ல காற்று, மணம் வீசும் மலர்களால் புத்துணர்வு கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். ''குழந்தைகளுக்கு துளசி இலைகளை பறித்து வாயில் இட்டு சுவைத்து உட்கொள்ள பழக்கப்படுத்தினால் காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்படாது.'' என, அனுபவ வைத்தியம் கூறும் இத்தம்பதி, சிறிய உடல் உபாதைகள் உதாரணமாக சளி, தும்மல், இருமல் பாதிப்பு ஏற்பட்டால், தூதுவளையை பறித்து கசாயம் வைத்து குடிப்பதை பழக்கமாகவும், தூதுவளை ரசம் வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை தொடர்ந்து கடைபிடிக்கின்றனர். மூலிகைத் தோட்டத்திற்கான முன்னோட்டமாக சிறிய அளவில் துவக்கி உள்ளோம் என்கின்றனர்.
ஆரோக்கியம் மேம்படும்
விக்னேஷ், மேலாளர், தனியார் மெட்ரிக் பள்ளி, காமயக் கவுண்டன்பட்டி: சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டுள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, காற்று மாசுபட்டுள்ளது. அதிகரித்து வரும் கோடைகால வெப்பத்தால் வீட்டிற்குள்ளாவது நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும். குறிப்பாக மூலிகை காற்று, மலர்களின் காற்றை சுவாசிக்கலாம் என்று தான் இந்த முயற்சியில் இறங்கினோம். காலையிலும், மாலையிலும் செடிகள் பராமரிப்பது என்பது மன அமைதியை தருகிறது. உளவியல் ரீதியாக நமது ஆரோக்கியம் மேம்படுகிறது. உடலுக்கு மட்டும் இன்றி, உள்ளமும் சுகாதாரத்தை பெறுகிறது. தற்போதுள்ளதை விரிவுபடுத்தி மூலிகை தோட்டம் ஒன்று அமைக்கலாம் என்று உள்ளோம். மூலிகைகள் பற்றிய விழிப்புணர்வு பொது மக்களிடம் வர வேண்டும். வரும் மாதங்களில் வீட்டில் அனைத்து இடங்களிலும் மூலிகை, மலர் செடிகள் வைக்க உள்ளோம்., என்றார்.
பசுமை இல்லம்
ஷர்மிளா, முதுகலை பட்டதாரி ஆசிரியை: காலையில் பள்ளிக்கு அவசரம் அவசரமாக கிளம்பி சென்று மாலையில் வீடு திரும்பும் போது உடலும் உள்ளமும் சோர்ந்து போகும். மூலிகை செடிகளும், மலர் செடிகளும் வீட்டில் வளர்க்க ஆரம்பித்தவுடன் அந்த சோர்வு நீங்கி விட்டது. வீட்டிற்குள் ஒரு மங்களகரமான சூழல் உள்ளது. மலர்கள் மலர துவங்கியவுடன் வீடு முழுவதும் ஒரு சுகந்தம் வீசுகிறது. அத்துடன் மூலிகைகளின் வாசமும் சேரும் போது, சுவாசிப்பதற்கு நல்ல காற்று கிடைக்கிறது. பூஜைகள் பண்ண மலர்கள் விலைக்கு வாங்க தேவையில்லை. சாதாரண தலைவலி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளுக்கு மாத்திரைகளை தேடிப் போக தேவையில்லை. பக்க விளைவுகள் இல்லாதது. செலவு குறைவு. எனவே தான் மூலிகை பண்ணை, மலர் தோட்டம் அமைக்க திட்டமிட்டோம். அதற்கு முன்னோட்டமாக வீட்டில் வளர்க்க துவங்கி உள்ளோம். எங்கள் இல்லம் தற்போது ''பசுமை இல்லம்'' என, மாற்றப்பட்டுள்ளது. நீங்களும் முயற்சி செய்யலாமே... என்கிறார்கள் இந்த தம்பதியினர்.
மேலும்
-
செந்தில்பாலாஜி ஜாமின் வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்