4 குடும்பத்துக்கு தலா ரூ.50,000

ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி அருகே பழைய சினிமா கொட்டாய் பகுதியில் பட்டாசு வெடித்த விபத்தில், செல்வராஜ், 29, தமிழ்செல்வன், 11, கார்த்தி, 11, லோகேஷ், 20, ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

அவர்களது குடும்பத்தினரை, நேற்று முன்தினம் இரவு, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, அவரது சொந்த நிதியில் தலா, 50,000 வீதம், 4 குடும்பத்தினருக்கும் நிவாரண உதவி வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.

Advertisement